• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாமிதோப்பு தலைமை பதியில் விஜய்வசந்த் தரிசனம்

.கன்னியாகுமரி மக்களவையின் 18வது நாடாளுமன்றத்திற்கு நடக்கும் பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்ததோடு, இன்று முதல் (மார்ச்_28) தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன், முதலில் அவரது தந்தை வசந்த குமரின் நினைவிடத்திற்கு தாயுடன் சென்று மரியாதை செலுத்திய பின், சாமிதோப்பு தலைமை பதிக்கு சென்று வழிபட்ட விஜய்வசந்திற்கு, தலைமை பதி நிர்வாகம் வரவேற்று அய்யா கோவிலின் மூலஸ்தானம் மற்றும் பள்ளியறை பகுதியில் தரிசனம் செய்த விஜய்வசந்திற்கு தலைமை குரு திருநாமம் இட்டார். அய்யாவழி பக்தர்கள் விஜய்வசந்திற்கு கதராடை அணிவித்து அவர்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார்கள்.

விஜய்வசந்த் பூஜித குரு பாலபிரஜாதிபதி அவர்களை மரியாதை நிமித்தம் அவரது இல்லத்தில் சந்தித்து, பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் நாமம் இட்டு வரவேற்று தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அவரது மக்கள் பணிகள் தொடரும் என வாழ்த்தினார்.