• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர், சுவாமி தரிசனம்

ByN.Ravi

Mar 22, 2024

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி இவர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலிற்கு அதிமுக கட்சி தொண்டர்களுடன் கோவில் மலை பாதையில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்பி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர் செயலாளர்கள் அழகு ராசா, குமார் , புதுப்பட்டி உமேஷ். வலையபட்டி மனோகான் ஒன்றிய, நகர, கிளை சார்பு அணி, மகளிர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள், முன்னிலையில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர், தொடர்ந்து வேட்பாளர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வெற்றியை சமர்பிப்போம் இவ்வாறு, அவர் கூறினார்.