• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Byவிஷா

Mar 22, 2024

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய அம்சமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சென்னையில் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் 133 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு முறை கொண்டு வரப்படும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் கூட்ட வலியுறுத்துவோம். மகளிர் உரிமைத் தொகையாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 3000 வழங்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களை உட்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். உயர் நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம். ஆளுநர் பதவியை நியமிக்கும் போது மாநில அரசின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை. நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்படும். 100 நாள் வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறை சமையல் எரிவாயு விலை கட்டுப்பாடு. இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை. விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் கொண்டு வர வேண்டும். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இத்தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.