• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிப்பு

ByI.Sekar

Mar 20, 2024

தேனி மாவட்டம் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வனை வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். .அதனைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் மகாராஜன் தலைமையில், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஆ. ராமசாமி , ஆண்டிபட்டி சேர்மன் சந்திரகலா முன்னிலையில், கட்சியினர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர் . வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அப்போது பொது மக்களிடம் கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜ்குமார், மருத்துவர் அணி விஜயராமன், ஒன்றிய துணைச் செயலாளர் போஜன் மற்றும் நிர்வாகிகள் வீரணன், ராஜா, தங்கம் பெரிய இருளன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.