தமிழ்நாட்டில் சீர் மரபினர் 68 சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், சுமார் பத்து ஆண்டு காலமாக டி .என். டி. ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, அதிமுக ஆட்சி காலத்திலும், தற்போது திமுக ஆட்சி காலத்திலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். அரசு அவ்வப்போது, போராட்ட குழுவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் நேரங்களில் வாக்குறுதி கொடுத்து வந்தனர் .
தேர்தல் முடிந்தவுடன் அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பொறுமை இழந்த சீர் மரபினர் மாநில துணைத்
தலைவர் ராமகிருஷ்ணன் மாநில துணைப் பொதுச் செயலாளர் அன்பழகன் மாநில நிர்வாகிகள் தவமணி மலர் உள்பட பலர் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கருப்பு கோவிலில் அதிமுக, திமுகவிற்கு எங்கள் சங்கத்தினர் ஓட்டு போட மாட்டோம் என்று கோவில் முன்பாக சத்தியம் செய்தனர்.
நேற்று, வெள்ளிக்கிழமை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து இருந்தனர். இதை பார்த்த பக்தர்கள் சற்று அச்சத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
சோழவந்தான் அருகே பாராளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம் என கோவிலில் சத்தியம் செய்த டி. என். டி.யினர்
