• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறப்பு

ByN.Ravi

Mar 16, 2024

திருமங்கலம் அருகிலுள்ள கப்பலுரை சேர்ந்தவர் மூர்த்தி(51). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பசுமலை ஆர்ச் அருகில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சாலை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து விபத்தை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.