• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

ByN.Ravi

Feb 29, 2024

சோழவந்தான் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு பால்,தயிர் உட்பட 12 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, குப்புசாமி,ஜவகர்லால், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன், வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி. பெருமாள், சங்கடஹர சதுர்த்தி விழா ஏற்பாடு செய்த ஏ.என்.ஏ. வெங்கடேசன், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல ,மதுரை அண்ணா நகர் தாசில்தா நகர் சித்தி விநாயகர் மற்றும் வர சக்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் ஆலயம் ,சர்வேஸ்வரர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயக ஆலயம் ,ஆகிய கோவில்களில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி அருள்மிகு விநாயகர் ஆலயத்தில், கிராம மக்கள் சார்பில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் நடைபெற்றது.
இதில் ,கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் விழா குழுவினர் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்தி இருந்தனர்.