கோவையில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.
நாளை கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குடிநீர் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவர்களிடமே கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)