• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தஞ்சமடையும் முக்கிய புள்ளிகள்

Byவிஷா

Feb 26, 2024

காங்கிரஸில் இருந்து விஜயதாரணி விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு எம்பியும் விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியிருப்பது அக்கட்சியில் தொடர் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றனர். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி நேற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வாய்பு மறுத்ததால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் விஜயதாரணி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எம்.பியாக இருக்கும் இவர், திருச்சி தொகுதியில் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட அவர் கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு மீண்டும் சீட் வழங்க தமிழக காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அவருக்கு சீட் வழங்க கட்சி தலைமை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்றால் அவரும் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது.