• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ByP.Thangapandi

Feb 23, 2024

TCCL 12 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம், TCOA பப்ளிக் பவுண்டேசன் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் சீலக்காரி அம்மன் திருமண மண்டபத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம், TCOA பப்ளிக் பவுண்டேசன் வழங்கும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை டிசிஓஎ மாநில தலைவர் வெள்ளைச்சாமி தலைமையிலும், டிசிஓஎ மதுரை மாவட்ட தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் சுரேஷ் , மாவட்ட பொருளாளர் மதியழகன் முன்னிலையிலும் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி முத்துராமன் கலந்து கொண்டு பொது மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

இதில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பொது மக்களுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை, கண் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நேய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் உசிலம்பட்டி தாலுகா நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்ட அனைத்து தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.