பெரம்பலூர் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் நாட்டுநல திட்ட மாணவர்களுக்கு 124- அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் ஆணைக்கிணங்க முதலுதவி பயிற்சி கொடுக்கப்பட்டது .
இதில் கல்லூரி நாட்டு நலத்திட்ட பொறுப்பாளர் வீரப்பன் அனைவரையும் வரவேற்றார் .
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொ) த புனிதவதி தலைமை தாங்கினார்கள் .
நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பெரம்பலூர் மூத்த சமூக செயற்பாட்டாளர் ஜெயராமன் இரத்த தானம், கண் தானம், முழு உடல் தானம் போன்றவைகளை விளக்கமாக எடுத்து கூறினார். அதோடு உதிரம் நண்பர்கள் குழு மகேஷ் குமரன் முழு உடல் தானம் செய்யும் வழிமுறைகளை எடுத்து கூறினார் .
உதிரம் நாகராஜ் இரத்த தானம் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார் . அருண் ஆபிரகாம் முதலுதவி (செயற்கை சுவாசம் -CPR ) எப்படி உயிரை காப்பற்றுவது என்று விளக்கமாக எடுத்து கூறினார் . செயல் முறை விளக்கத்தோடு எடுத்த கூறினார் . மாணவர்களும் செய்முறை செய்து தெரிந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
