• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு உள்ள சிறப்பு புகழ், பெண்களின் சபரிமலை

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி கோவில்களில் ஒன்று, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த கோவிலுக்கு உள்ள சிறப்பு புகழ். பெண்களின் சபரிமலை என்பது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான மெர்லியண்ட் தாஸ் எழுப்பியுள்ள கோரிக்கை..

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை எப்படி ஆண்கள் கட்டு கட்டி அதனை தலையில் சுமந்து செல்வது போன்றே. மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு, மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலின் திருவிழா நாட்களில் செல்லும் பெண்கள் அனைவருமே கட்டு, கட்டி அதனை தலையில் சுமந்து சென்று மண்டைக்காடு பகவதியை தரிசனம் செய்வது தொண்டு தொற்று , இன்று வரை தொடர்கிறது.

மண்டைக்காடு பகவதி அம்மனின் கோவிலின் மாசி திருவிழாவின் காலத்தில், திருவிழா ஸ்பெஷல் பஸ் அனைத்தையும் பெண்களின் பயணத்தை இலவசமாக இயக்கம் வேண்டும் என்ற புதிய கருத்தை இன்று நடந்த மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவரும்,திட்டக்குழு தலைவருமான மெர்லியண்ட் தாஸ் எழுப்பி உள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசின் குமரி மாவட்டம் போக்குவரத்து துறைக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இன்று நடந்த கூட்டத்தில் 22_தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டாலும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா காலத்தில்,10_நாட்கள் மண்டைக்காடு பகுதிக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இலவசமாக இயக்கப்படுமா.?என்ற கேள்வி குறி பெண் பக்த்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.