• Thu. Mar 27th, 2025

குமரி குழித்துறை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயர்திரு நிலைப்படுத்தல் பெருவிழா

கன்னியாகுமரி மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக ஆல்பர்ட் அனஸ்தாஸ் பொறுப்பேற்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு வட்டங்களை உள்ளிடக்கிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறைமாவட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் இரண்டாவது ஆயராக குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த ஆல்பர்டு அனஸ்தாஸ் என்பவரை, வாடிகான் தலைமை போப் பிரான்சிஸ் கடந்த ஜனவரி மாதம் 13_ம் தேதி நியமனம் செய்து அறிவித்தார், இதனையடுத்து அவரது பதவியேற்பு விழா (திருநிலைப்பாடு சடங்கு) மார்த்தாண்டம் அருகே நட்டாலம் புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல வளாகத்தில் வைத்து நடைபெற்றது,
இதில் போப் பின் இந்தியா மற்றும் நேபாள தூதர் லியோ போல்டோ ஜெரெல்லி முன்னிலையில் மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி திருநிலைப்பாட்டின் அடையாளமான போப் பிரான்சிஸால் வழங்கப்பட்ட மோதிரம், தலை கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கி திருநிலைப்பாடு நிகழ்வை செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட ஆயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருட் பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகள், பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், முன்னாள் குமரி மக்களவை உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், சாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிராஜிதி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு ஆயர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் பால்வேறு அரசியல் கட்சியினர்கள் உட்பட பல் சமய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்லாயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.