• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோடைக்காலத்தில் மின்தடை இருக்காது – மின்சார வாரியம்

Byவிஷா

Feb 19, 2024

கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின்தடை அதிகம் இருந்ததைப் போல, இந்த ஆண்டு மின்தடை இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டேன்ஜட்கோ ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக மின் தடை இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்சார துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மின்சாரம் தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. டேன்ஜட்கோ என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது. டேன்ஜட்கோ செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம்.