• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

ByKalamegam Viswanathan

Feb 17, 2024

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கி பேசினார்.

அதில், மாணவர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது தான் பொதுநலனுக்கும் இயற்கை சுற்றுச்சூழல் நலனுக்கும் செய்யக்கூடிய சிறந்த சேவையாகும். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் சாதனையாளர்கள் ஆவீர்கள் என்றார்.

மேலும் அப்துல் ரகுமான் மற்றும் வினித் ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சாலையில் கிடைத்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நற்செயலை வாழ்த்தி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன், சமூக ஆர்வலர் இல.அமுதன், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.