• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்

ByKalamegam Viswanathan

Feb 17, 2024

விருதுநகர் மாவட்டம் ராஜபாளைத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஊர்வலமாக வந்து பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களது கோரிக்கைகளான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோயில் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்.

ராஜபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டத்தை திருத்தியதை ரத்து செய்ய வேண்டும்.

சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உட்பட 25 திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக வந்து ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் அங்கன்வாடி ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மரியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.