• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வானிலை நிலவரங்களை இனி துல்லியமாக அறியலாம்

Byவிஷா

Feb 9, 2024

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்று விண்ணில் செலுத்தியுள்ள புதிய செயற்கைக் கோள் மூலம், இனி வானிலை நிலவரங்களை துல்லியமாக அறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைகோளை நாசா இன்று விண்ணில் செலுத்தியது. கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இது, பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்தபடி கடற்பகுதி மற்றும் வளிமண்டலத்தை சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யும். இதில் 3 அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கருவிகள் மூலம் தினமும் பூமி துல்லியமாக படம்பிடிக்கப்படும். மூன்றாவது கருவி மூலம் மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியை இந்த செயற்கைகோள் தெளிவாக காட்டும் என திட்ட விஞ்ஞானி ஜெர்மி வெர்டெல் தெரிவித்தார்.
சூறாவளி மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக தெரிவிக்கவும், வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் மாற்றங்களை விவரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாசிகள் எப்போது பூக்கும் என்பதை கணிக்கவும் இந்த செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.