• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

ByKalamegam Viswanathan

Feb 8, 2024

மதுரையில் KINS அறக்கட்டளை மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமானது களிமங்கலம் பகுதியில் நடைபெற்றது.
இதில் களிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள், முதியவர்கள் , குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் அரவிந்த கண்மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிறப்பான சிகிச்சைகளை வழங்கினர்.

இந்த முகாமில் கண்புரை நோயாளிகள் முகாம்களில் கலந்துகொண்ட பின்னர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாகவும் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை இலவசமாக செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை, குழந்தைகளின் கண் நோய்களான பிறவி கண்புரை, மாறுகண், பிறவி கண்நீர் அழுத்தநோய் மற்றும் மாலைக்கண் ஆகிய நோய்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற நிலையில் முகாம் பயனுள்ளதாக இருந்ததக தெரிவித்தனர்.