• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜெயம் எஸ்.கே கோபி அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு

Byஜெ.துரை

Feb 3, 2024

தயாரிப்பாளரும் நடிகருமான ஆன்மீக இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் எஸ்.கே கோபி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
சினிமா விநியோகஸ்தராக இருந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து வந்தவர் ஜெயம் எஸ்.கே கோபி. ஆன்மீக இந்துமதக் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்ததோடு ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்திருந்தார். மேலும் ஆளும் அரசிற்கு எதிரான தனது அரசியல் கருத்துகளை பொது மேடைகளில் முன்வைத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தீவிர முருக பக்தரான இவர் தற்போது அரசியலை விட்டு முழுமையாக விலகுவதாக தனது ஓ பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இனிமேல் சினிமாவிலும், ஆன்மீகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு விரைவில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் கடவுள் முருகர் பற்றிய திரைப்படம் ஒன்றையும் தயாரிக்க இருப்பதாக தெரிவித்தார்..