• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் கல்லணை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு… குடியிருப்பு வாசிகள் செல்ல பாதையின்றி தவிப்பு..,

ByKalamegam Viswanathan

Jan 31, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஸ்ரீவால குருநாதர்சாமி திருக்கோவிலுக்கு அருகில், 20 குடியிருப்பு வாசிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான திருக்கோவிலுக்கு அருகில், 54 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால்,20 வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். குடியிருப்பு வாசிகளின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு வழி இல்லாததால் மற்றும் குடியிருப்பு வாசிகளின் குழந்தைகள் பள்ளிகளுக்கு கால தாமதமாக சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறும் குடியிருப்பு வாசிகள், ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியும், மின்வாரிய மின் தூண்களும் அமைந்துள்ளதால் அதனை இயக்க முடியாமலும், ஊராட்சி நிர்வாகம் தவித்து வருவதுடன், பலமுறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும்  இல்லாததால்,  குடியிருப்பு வாசிகள் 50க்கும் மேற்பட்டோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் செல்ல பாதை இன்றி தவிக்கும் எங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனைடன் தெரிவிக்கின்றனர்.