• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நீட்டால் மேலும் ஒரு உயிர் பலி!..

Byமதி

Oct 30, 2021

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் கீர்த்திவாசன், ஏற்கெனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் 4ஆவது முறையாக கடந்த மாதம் அத்தேர்வை எழுதினான். கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக கூறி வந்த கீர்த்திவாசன், இந்த முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதோ என்ற அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை விஷமருந்திய கீர்த்திவாசன் அதை தன் தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே கீர்த்திவாசனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.