• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை நகராட்சியில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது…

ByG.Suresh

Jan 26, 2024

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இருபத்திஏழாவது வார்டில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் நகராட்சி ஆணையாளர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய
திட்டங்கள் குறித்து மனுக்கள் அளித்தனர். மேலும் வார்டில் உள்ளநிறை குறைகளை பற்றி எடுத்துரைத்தனர். பின்னர் நகர் மன்ற தலைவர் தெரிவிக்கையில் தமிழக முதல்வர் நகரின் வளர்ச்சிக்கு விரைவில் நிதி ஒதுக்கிட உள்ளதாகவும், சிவகங்கை நகராட்சிக்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிட கேட்டுள்ளதாகவும், இந்த நிதி வந்தவுடன் இங்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், .நகர்மன்ற உறுப்பினர்கள் வீனஸ் இராமநாதன், மதியழகன், ஆர் சரவணன், வீரகாளை மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி, இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஒமேகா திலகவதி கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்தி, வட்டச் செயலாளர் ராஜா சகுப்தின், ஆர் சேகர், சேது, மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.