• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உபரிநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளதால், பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்…

ByP.Thangapandi

Jan 24, 2024

உசிலம்பட்டி அருகே கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீர் செல்ல வழியில்லாமல் விவசாய நிலங்களில் தேங்குவதால் – சுமார் 50 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள பாப்பிநாயக்கன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பெரிய கண்மாய்., கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பியுள்ளனர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இந்த பாப்பிநாயக்கன்பட்டி பெரிய கண்மாய் மற்றும் அருகில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் இந்த கண்மாய் மற்றும் குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் பகுதிகளில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள சூழலில் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நீர் தேக்கத்தால் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 50 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.