• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா பேரூராட்சித்தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

சோழவந்தானில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை பிரசன்னா குமாரி வரவேற்புரை ஆற்றினார் .சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன் பேரூர் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ் வார்டு கவுன்சிலர்கள் முத்துச்செல்வி சதீஷ்குமார் செல்வராணி ஜெயராமன் சிவா கொத்தாலம் செந்தில் வேல் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை தீபா பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை ஜெர்ஸி நன்றி கூறினார்.