• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாலை விபத்து சிறுவன் உட்பட 2 பேர் பலி

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

மதுரை மேலூர் அருகே மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் காடம்பட்டி விளக்கு அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயபிரபா (39) என்பவர் தனது தாய் தந்தையரான கொம்பையா (71), ராமலெட்சுமி (53) மற்றும் தனது சகோதரரின் மகன் ராம் சித்தார்த் (5) வீட்டு பணி பெண் செல்வி (45) ஆகியோருடன் காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறம் இருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அனைவரும் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் ராம் சித்தார்த் (5) சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே போல் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமலட்சுமி (53) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.கொம்பையா (71), ஜெயபிரபா (39), செல்வி (45) ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.