• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் பாஜகவினர் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து வழிபாடு

ByP.Thangapandi

Jan 22, 2024

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று பிரதிஷ்டை விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள் விளக்கு ஏற்றுவது, கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக மதுரை மாவட்ட கல்வியாளர் பிரிவு சார்பில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராமர் சிலையின் திரு உருவ படத்திற்கு சிவாச்சாரியார்கள் மூலம் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமார் 12 மணியளவில் உசிலம்பட்டியிலும் இந்த ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.