• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளால் அச்சப்படும் மக்கள்..!

ByKalamegam Viswanathan

Jan 10, 2024

மதுரை மாநகரில் பல பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் விலங்கனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.
மதுரை மாநகர் சாலையில் மனிதர்களின் நடமாட்டத்தை விட விலங்குகள் நடமாட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆக மாடுகள் நாய்கள் சாலையில் திரியும். ஆனால், நாய்கள், மாடுகள், இந்த வரிசையில் எருமை மாடுகளும் குதிரைகளும் சேர்ந்து விட்டன. சாதாரணமாக விலங்குகள் சாலையில்சென்று கொண்டிருப்பதால் வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் பயந்தபடியே செல்கிறார்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக இது போன்ற நான்கு கால் உயிரினங்களை பிடித்து செல்ல வேண்டும் மேலும் தக்க அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைக்கின்றனர்.