• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள்.., அரசாணை வெளியீடு..!

தமிழகத்தில் திருவள்ளுர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில்,அரசு கூறியிருப்பதாவது:


“வணிகவரித் துறையில் தற்போது 12 நிர்வாக கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வணிகவரித் துறையை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் இடத்திலும் செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு இடங்களிலும் சேர்த்து மொத்தம் எழு புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் கூடுதலான மனித வளங்களை களப்பணிக்கு அளிக்க இயலும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.