• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பானா மூப்பன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா..!

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

விக்கிரமங்கலம் அருகே பானா மூப்பம்பட்டி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பானாமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் ராஜா கம்பளத்தார், சங்க பொருளாளர் முருகன், செயலாளர் அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள் ஆர்யா, தீனா, அர்ஜுனன், பிரசாத், பிரேம், வினோத் தினேஷ், பிரேம் ஆகியோர் கலந்து கொண்டனர், விழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம மந்தையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பானாமூப்பம்பட்டி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.