• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு… கரிமேடு போலீசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

மதுரை ஆரப்பாளையம் ஈபி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரசூல் ஷெரீப். இவர் சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.

நேற்று காலை மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுத்து வீசப்பட்டு களைக்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து பீரோவை திறந்து ரசூல் ஷெரிப் பார்த்த போது, அதிலிருந்த 25 சவரன் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கரிமேடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..