• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

போருக்கு தயாராகும் வடகொரியா..!

Byவிஷா

Jan 1, 2024

“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து எப்போது வேண்டுமானாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியடிக்க தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி, ராணுவ படைகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று வடகொரிய அதிபர் கூறியுள்ளார்
இந்தநிலையில், வடகொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான இலக்குகணை நிர்ணயிக்கும் 5 நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு(2023) அதிகரித்துள்ளதால் வடகொரியாவை அணுஆயுத போருக்கு தள்ளியுள்ளது.
கடுமையான போர் சூழலில் பதிலடி தரும் திறன்களை பெற பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். எதிரிகளின் எத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களையும் அடக்க முழுமையான, சரியான ராணுவ தயார் நிலையை பெற்றிருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய கிம், “2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளது. மேலும் அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.