• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்..!

Byவிஷா

Jan 1, 2024

ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது, புத்தாண்டின் முதல் நாளில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ., தூரம் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன எக்ஸ்-ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் . இதன் ஆயுட்காலம், 5 ஆண்டுகள். தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ் 4 இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மட்டும் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் பிஎஸ் 4 இயந்திரம் உதவியுடன் புவியை வலம் வந்து அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.