• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல் – நீதிமன்றம் உத்தரவு…

Byமதி

Oct 28, 2021

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா அனுமதி அளித்துள்ளார்.

கோடநாடு சதி திட்டம் குறித்து தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில், போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனிப்படை போலீசார் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை கடந்த 25 ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரையும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கூடலூர் சிறையில் அடைக்கபட்டனர்.

இந்த நிலையில் தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா அனுமதி அளித்துள்ளார்.