• Fri. May 3rd, 2024

AY 4.2 கொரோனா வைரஸ் – மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்…

Byமதி

Oct 28, 2021

கர்நாடகாவில் புதிய பரிமாணம் அடைந்த AY 4.2 கொரோனா வைரஸால், 2 பேர் திக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அனைத்து இடங்களும், பள்ளி கல்லூரிகளிலும் 100 % மக்கள் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் அனைத்து இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடி வருகின்றனர். இந்த தளர்வுகளை அச்சுறுத்தும் விதமாக பெங்களூருவில் இருவருக்கு கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான AY 4.2 வைரஸ் இருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்டா 4 வைரஸின் பரிமாண வளர்ச்சியான AY 4.2 மூலமாக ரஷ்யா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மூன்றாவது அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெங்களூரு நகரில் உள்ள கொரோனா ஆய்வு மையத்தில் பலருடைய மாதிரிகளை எடுத்து மரபணு வரிசை படுத்தல் ஆய்வில் ஈடுபட்ட போது AY 4.2 வைரஸ் பாதிப்பு இருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை துவங்க பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி துரிதமாக எடுத்துள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *