• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விடுபட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு..!

Byவிஷா

Dec 30, 2023

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விடுபட்டுள்ள அரையாண்டுத் தேர்வுகளுக்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரையும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 10ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.