• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சுனாமி நினைவு சின்னத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அரசு அதிகாரி அஞ்சலி

இந்தியாவின் தென் எல்லை கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு சின்னத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அரசு அதிகாரி அஞ்சலி.

,19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று! ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து மாக்களுக்கும் விஜய்வசந்த் எம். பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

2004 டிசம்பர் 26 இதே நாளில் சுனாமி அழிப்பேரலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத சுவடு, உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான அனைத்து அன்மாக்களுக்கும்  அஞ்சலி செலுத்தும் வகையில் சுனாமியின் 19-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், நாகர்கோவில் ஆர். டி.ஓ சேதுராமலிங்கம், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் ஸ்டிபன், காங்கிரஸ்  பேரூராட்சி உறுப்பினர் ஆனிதாமஸ், சுரேஷ் குமார் மற்றும் தாமஸ், செந்தில் உள்பட பேரூராட்சி கவுன்சிலர்களும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.