• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் இராஜபாளையம் MLA

ByKalamegam Viswanathan

Dec 25, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் செட்டியார்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி மக்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையத்தில் நம்பர் ஒன் உணவு தயாரிக்கும் தனியார் கேட்டரிங் சமையல் கலைஞர்களை வைத்து நாள்தோறும் 25,000 பேருக்கு லெமன் சாதம் புளியோதரை வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட வெரைட்டி ரைஸ் களை தயார் செய்து 200 நபர்களை வைத்து பேக்கிங் செய்து சின்னமனூர் நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் வருவாய் ஆய்வாளர் வாசகம் மேற்பார்வையில் உணவு தரம் குறையாமல் உயர் ரக அரிசி மற்றும் தரமான காய்கறிகளை கொண்டு ஏழு நாட்களாக உணவு தயாரித்து அனுப்பி வருகிறார்.

இது குறித்து இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கூறும் பொழுது,

தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க விருதுநகர் மாவட்ட அமைச்சர் வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டதால், நாள்தோறும் 15 லட்சம் ரூபாய் செலவில் உணவு பொட்டலங்கள் தயார் செய்து, தரம் குறையாமல் பேக்கிங் பண்ணி அனுப்புவதாகவும், இரவு முழுவதும் சமையல் பணிகள் நடைபெற்று அதிகாலையில் பேக்கிங் செய்து தூத்துக்குடிக்கு காலை 11 மணிக்கு கிடைக்கின்ற அளவில் அனுப்பி விடுவதாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தெரிவித்தார். மேலும் உணவு பொட்டலங்கள் தயார் செய்து தூத்துக்குடி மாவட்டம் வரை கொண்டு செல்லும் வழியில் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உணவு செல்லும் வாகனத்துடன் சென்று கொடுத்து வருகிறார்.