• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேட்டுப்பாளையம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

BySeenu

Dec 23, 2023

மத்திய இனை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைனவ திருத்தலமாகும். ஆண்டு தோறும் இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு கடந்த 13 ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏகாதசி பெருவிழாவை ஒட்டி நாச்சியார் திருக்கோலம், மோகன அவதாரம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்ட நிலையில், அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் உற்ஷவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் சொர்க்க வாசல் முன்பு இருந்த ஆழ்வார்களுக்கு முதலில் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனை தொடர்ந்து சொர்க்க வசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்க பட்டு கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு சொர்க்க வசல்வழியாக வந்து அரங்கநாதரை வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இனை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தார்.