• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நடிகை கங்கனாரனாவத் பா.ஜ.க. வேட்பாளராகிறாரா..!

Byவிஷா

Dec 20, 2023

சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை கங்கனாரனாவத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். அதற்காக அவர் சிறந்த பெண் நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். லைஃப் இன் எ மெட்ரோ, வோ லாம்ஹே மற்றும் ஃபேஷன் ஆகிய திரைப்படங்களில் உணர்ச்சி ரீதியில் வலிமையான கதாபாத்திரங்களில் அவர் நடித்தற்காக பாராட்டுகளைப் பெற்றார்.
42 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். இதுவரை 5 பிலிம்பார் விருதுகளையும்,4 தேசிய விருதுகளையும்,ஒரு பத்மஸ்ரீ விருதையும் கங்கனா ரனாவத் பெற்றுள்ளார். கங்கனா ரனாவத் தாம் தூம் மற்றும் தலைவி ஆகிய தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து தலைவி படத்தின் ஜெயலலிதாவாக நடித்து இருந்தார். இல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் என்று தான் சொல்ல வேண்டும். சமீத்தில் இவர் நடித்த சந்திரமுகி 2 படம் வெளியானது. தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை கதையை பின்னணியாக கொண்ட எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போய் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வரும் கங்கனா ரனாவத், பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தார். இதையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.