• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்களுடம் முதல்வர் முகாமில் அனைத்து துறையும் ஒரே இடத்தில் இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி…

ByB.MATHIYALAGAN

Dec 18, 2023

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களிடம் முதல்வர் முகாமை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன். தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன். ஆணையர் கிருஷ்ணராஜன்.இவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியல் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன். பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் திருமாறன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் நகராட்சி நிர்வாகம் பல்வேறு துறைகள் குறிப்பாக சொத்துவரி, குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டிட உரிமை, வர்த்தக உரிமை, தெருவோர வியாபாரிகள் நலத்திட்டங்கள், புதிய குடிநீர் இணைப்பு, திடக்கழிவுமேலாண்மை,மின்சாரம், காவல்துறை, மருத்துவம் இது போன்ற துறைகள் அமைக்கப்பட்டு வரும் பொது மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு கணணியில் (கம்ப்யூட்டர்) பதியப்பட்டு 30.நாளில் தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அடைந்தனர். நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர்.