• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தொடர் கனமழை மற்றும் மிதமான தொடர் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

ByP.Thangapandi

Dec 18, 2023

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான சாப்டூர், பேரையூர், எழுமலை மற்றும் உசிலம்பட்டி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை மற்றும் மிதமான தொடர் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வரும் சூழலில் தமிழகத்தில் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ள சாப்டூர், பேரையூர், எழுமலை மற்றும் உசிலம்பட்டி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை மற்றும் மிதமான சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதே போன்று உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மிதமான தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.