• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை..!

ByKalamegam Viswanathan

Dec 17, 2023
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், இன்று அதிகாலை நான்கரை மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத (தனுர்) பூஜைக்காக அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 11.30 மணியளவில் நடை அடைக்கப்பட்டு. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் இரவு பள்ளியறை பூஜை முடிந்தபின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் அதிகாலையில் எழுந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பெண்கள், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்தனர். இதே போல் திருப்பரங்குன்றம் வெயிலுக்குகந்த அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.