• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காளையார்கோவிலில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா..!

சிவகங்கை காளையார்கோவில் ஒன்றியத்தில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தினை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகாவில் இளைஞர்களின் நீண்ட நாள் கனவுகளாக இருந்த இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் தற்போது காளையார் கோவிலை சேர்ந்த எஸ் எம் பேவர் பிளாக் தலைவர் மோசஸ் ஏற்பாட்டில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர், ஜி.பாஸ்கரன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆகியோர் திறந்து வைத்தார். மேலும் மைக்கேல் காலேஜ் தாளாளர் ஸ்டாலின் எம்.ஆரோக்கியராஜ், பார்வகுல சங்க மதுரை மண்டல தலைவர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதன்பின் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மைக்கேல் கல்லூரி நிறுவனர் ஸ்டாலின் இறகு பந்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், பிஜேபி மாவட்ட தலைவர் மேப்பில் சக்தி, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் விஜிபி கருணாகரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்