• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் கேமராக்கள் திருட்டு..,போலிசார் விசாரணை…

ByNamakkal Anjaneyar

Dec 1, 2023

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள வேளாளர் காலனி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் நந்தகிருஷ்ணன் இவர் நேற்று இரவு ஒன்பமுப்பது மணி அளவில் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் இன்று காலை 6 மணி அளவில் அருகில் இருந்த மளிகை கடைக்காரர் கடையைத் திறக்க வந்த போது ஸ்டுடியோ ஷட்டர் திறந்து இருப்பதை பார்த்து நந்தகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது சட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் இரண்டும் அருகில் இருந்த மளிகை கடையில் இருந்துள்ளது. அரை சட்டர் மட்டும் திறந்த நிலையில் இருந்த கடைக்குள் இருந்து ஒன்றரை லட்சம் மதிப்புள்ள இரண்டு கேமராக்கள் மற்றும் விலை உயர்ந்த பேட்டரிகள் திருடு போய் இருப்பது தெரிய வந்ததை அடுத்து உடனடியாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சிசிடிவி கேமரா ஆதாரங்களை வைத்தும் காவல்துறையினர் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.