• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக, ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா..!

ByM. Dasaprakash

Nov 30, 2023

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலர் எழுச்சி விழா முதல்முறையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் மார்க்கண்டையன் தலைமை வகித்தார்.தேனி மாவட்ட தலைவர் குமரேசன் முன்னிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஊராட்சி செயலர்கள் வேல்முருகன், ஜீவானந்தம், ஜோதி பாசு மற்றும் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.