• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன், தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி…

Byகுமார்

Nov 29, 2023

கற்கோ என்ற தலைப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் துவங்கியது.

மதுரை கோச்சடையில் அமைந்துள்ள குயின் மீது பள்ளியில் கற்கோ என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கல்வி பயிலும் நிகழ்வு துவங்கியது.

இந்த நிகழ்வினை தமிழகத்தின் முன்னணி மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையின் நிறுவனமான டாக்டர் சி.இராமசுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.

பள்ளியின் தலைவர் சந்திரன் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறதோ அதே போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.

மேலும் மதுரையில் உள்ள சேதுபதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடம் கற்றுக் கொள்ளும் புதுமையான நிகழ்ச்சி துவங்கியது.