தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ஷஜீவனா விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
தேனி மாவட்ட குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை வழங்கப்படுகிறது இந்த சிகிச்சைக்கான சிறப்பு முகாம் தேனி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வரை அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெறுகின்றன இம் முகாமில் ஆண்களுக்கான குடும்ப அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி வழங்கப்படுகிறது இதுவரை தற்காலிக மற்றும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் உயர் வரிசை குழந்தை பட்டியலில் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர் சிலருக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உடலில் பிரச்சனைகள் இருக்கும் ஆனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தின் போது உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகின்றன இதைத் தவிர்த்திடும் வகையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொள்ள இதற்கென பிரத்யோகமான சிறப்பு முகாம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. தகுதியானவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 1100 ரூபாயுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கும் ரூபாய் 3900/ உடன் மொத்தம் 5000/ ரூபாய் ஊக்கத்தொகையாக உடனடியாக வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் குடும்ப நல துறையின் துணை இயக்குனர் அன்புச்செழியன் இணை இயக்குனர் பொறுப்பு சிவக்குமார் துணை இயக்குனர் தொழுநோய் ரூபன் ராஜ் துணை இயக்குனர் காசநோய் ராஜ பிரகாஷ் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பால சங்கர் மகப்பேறு திட்ட அலுவலர் மகாலட்சுமி மற்றும் குடும்பநலத்துறை அலுவலர்களான வெற்றிவேந்தன் ரத்தீஷ் இளவரசி ராஜேஸ்வரி பால்பாண்டி விக்னேஸ்வரன் முத்து வினிதா மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
