• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில்.., தேனி மாவட்டம் அமமுக நிர்வாகிகள் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..!

தேனி வடக்கு மாவட்டம், மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாட்டினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.மகேந்திரன்,தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை எம்.பி. ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.இதில்
தேனி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ஆர். ஜெயக்குமார், மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அனுமந்தன், மாவட்ட துணைச் செயலாளர் செயலாளர் டி. பாலச்சந்திரன், ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், பெரியகுளம் நகர செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை செயளாலர் மோகன்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நல்லமாயன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் ராம்பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்       ஏ.கே.டி.ராஜா, ஏழுமலை பேரூர் செயலாளர் பக்ரூதீன், உசிலை வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், சேடப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன், மாவட்ட பாசறை செயலாளர் சுமதி ஸ்ரீ, மாவட்ட மகளிரணி தலைவி சுமதிமதி, கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், உசிலை நகர் அம்மா பேரவை செயலாளர் உக்கிர பாண்டியன், வேப்பனூத்து ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், பூதிப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் ஆகியோர் தங்களுக்கு இணைத்து கொண்டனர். இணைந்தவர்கள் எடப்பாடியாருக்கு பூங்கொத்து கொடுத்தனர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் வரவேற்றார்.