• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தீபாவளிக்கு டாஸ்மாக்கில் 600 கோடி விற்பனையை இலக்காக நிர்ணயித்த திமுக அரசு.., 

மக்களின் நம்பிக்கை சிதைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூறாமல் மௌனமாய் இருப்பது நியாயமா? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி..,

உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன்முதலாக ஜப்பானின் டோக்கியோவில் 1998 நவம்பர் 13 நடந்த மாநாட்டில் கருணை மனப்பான்மை வளர்ப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது அன்றிலிருந்து இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சுனாமி,கஜாபுயல், கொரோனா காலங்களில் கருணையின் அடையாளமாக அம்மாவின் அரசு இருந்தது.ஆனால் இன்றைக்கு கருணையே இல்லாத ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது.

 கடந்தாண்டு சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஒரு கேள்வியை எழப்பி,அதில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்  தருகிறேன் மதப் பண்டிகைக்கு ஒவ்வொருவரும் வாழ்த்து கூறுகிறோம், வாழ்த்துக் கூறுவது தமிழர் பண்பாடு என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் பேசியபோது முதல்வர் என்பது அனைவருக்கும்  பொதுவானவர்,அனைத்து மத திருவிழாக்கள் வாழ்த்து கூற வேண்டும் தீபாவளிக்கு என வாழ்த்து கூறவில்லை என கேள்வி எழுப்பினார்.அதற்கு ஒரு மழுப்பலான பதிலை  ஸ்டாலின் கூறினார்.தீபாவளி பண்டிகை என்றாலே கடவுளுடைய அருளாசி, தலைவர்களுடைய வாழ்த்துக்கள் தான் அதைத்தான் மக்கள் விரும்புவார்கள்.

கடந்த ஆண்டு டாஸ்மார்க் மதுபானம்  431 கோடி விற்பனையானது.  இந்தாண்டு 600 கோடி இருக்க வேண்டும் என்று இழக்கை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் சொல்லப்படுகிறது.

 மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்திலேயே புத்தாடை கிடைத்தது, பாடுபட்டு உழைத்த சேமித்த பணத்திலே வெடி கிடைத்தது, பலகாரம் கிடைத்தது, ஆனால் முதலமைச்சர் வாழ்த்து மக்களுக்கு கிடைக்க வில்லையே?

மதசார்பற்ற அரசு என்றால் அனைத்து மதத்தினரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று  சட்டமன்றத்திலே எழப்பிய கேள்விக்கு  பதிலை சொல்லி இருக்க வேண்டும். 

முதல்வர் பதவி என்பது ஒரு அரசு பதவி, மக்களுக்கான பதவி அது அனைத்து மக்களுக்குமான பதவி, அப்படியானால் ஒரு முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பவர் இடத்தில் இருந்து வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்ப்பது நியாயம் தானே?

 ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் தீபாவளிக்கு ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார் வடநாட்டில்  ராமர் வனவாசம் சென்று நாடு திரும்பிய நாளே தீபாவளி என்ன சொல்லுகிறார்கள். தென்னாட்டில் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படி நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த பண்டிகையை முதலமைச்சர் சீர்குலைக்கலாமா ?இன்னும் சொல்லப்போனால் அந்த நம்பிக்கையை சிதைக்கின்ற வகையிலே வாழ்த்து கூறாமல் மௌனம் காப்பது எந்த வகையில் நியாயம்? 

ஒரு தனி நபராக நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் பொது வாழ்விலே மக்களால் கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த நம்பிக்கை உரியவராக, எல்லோருடைய நம்பிக்கை உரியவராக, எல்லோருடைய அன்புக்குரியவராக, எல்லோருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். 

 தீபாவளி முடிந்து போய்விட்டது அவர் வாழ்த்து சொல்ல மாட்டார் அது வேற விஷயம். ஆனால் ஒரு முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பவர் காட்டுகிற பாரபட்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதை உணர்ந்து கொள்ள வேண்டும், அதை தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் கடந்த பொங்கல் பண்டிகையில் கரும்பு வழங்கப்படவில்லை எடப்பாடியார்  ஆர்ப்பாட்டத்தை அறிவிப்பு கொடுத்த அடுத்த நிமிடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படுகிறது.

 முதலமைச்சர்  முத்துவேல் ஸ்டாலின் வாழ்த்து  சொல்ல முன் வரவில்லையே அவரிடம் கருணை இல்லையா? மக்களிடம் வேறுபட்டு இருக்கிறாரா அல்லது  இடைவெளி அதிகமாக இருக்கிறதா? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது .

இஸ்லாமிய சகோதரர்களுக்கும், கிறிஸ்தவ சகோதரர்களுக்கெல்லாம் இந்து மக்கள் இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். 

பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு வகைகளை தயார் செய்ய இஸ்லாமிய மக்களின் உழைப்பு, கிறிஸ்தவ மக்களின் உழைப்பு, இந்து மக்களின் உழைப்பு என ஆகியோரின் உழைப்பின் வடிவமாக சமதர்ம சமுதாயத்தின் உழைப்பின் வடிவமாகத்தான் அந்த புத்தாடையும், அந்த பட்டாசு அந்த பலகாரமும் வெளிவருகிறது.

 இந்த முதலமைச்சர் நாட்டு மக்களை பாரபட்சம் இல்லாமல் காப்பாற்ற முன்வருவாருவாரா என்று மிகப்பெரிய சந்தேகம் எழந்துள்ளது.

இந்த நாட்டு மக்கள் இடத்திலே தீபாவளிவாழ்த்து என்று நீங்கள் சொல்ல முன்வர வேண்டாம் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற இந்த நாளுக்காவது நீங்கள் வாழ்த்து சொல்ல முன் வரலாமே?

நீங்கள் முன்வர மாட்டீர்கள் அதற்கு தக்க பாடத்தை வரும் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு பரிசாக தருவார்கள் என கூறினார்.