• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பிரஸ் கிளப் சார்பில், பத்திரிகை யாளர்களுக்கு “தீபாவளி பரிசு” ஆட்சியர் ஸ்ரீதர்..,

நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு “தீபாவளி பரிசு.
ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார். நாடே தீபாவளி கொண்டாட்ட உற்சாகாத்தில் இருக்கும் சூழலில், நாகர்கோவிலில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் 165_பேருக்கு பிரஸ் கிளப் சார்பில் கடந்த 22_ஆண்டுகளாக வழங்கிய தீபாவளி பரிசு கடந்த கொரோனா காலத்தில் மட்டும் தடைபட்டது.

இவ்வாண்டு தீபாவளிக்கு நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில், குமரி ஆட்சியர் ஸ்ரீதர்ரை மூத்த பத்திரிகையாளர் தாகூர் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்வில் செய்தி பத்திரிகை தொடர்பு அதிகாரியை, கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் சக்தி வேல் சால்வை அணிவித்து வரவேற்றார்.

வரவேற்புரை ஆற்றிய நாகர்கோவில் பிரஸ் கிளப் செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வர வேற்றதுடன். கடந்த 22 ஆண்டுகள் குமரி மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களின். இன்ப, துன்பங்களில் பங்கேற்று.முழுக்க, முழுக்க பத்திரிகையாளர்களின் நலனை குறிக்கோளாக கொண்டு நாகர்கோவில் பிரஸ் கிளப் செயல் படுவதை தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் கிளப் சார்பிலான தீபாவளி பரிசை வழங்கி வாழ்த்தி பேசினார்.